வினாவிடை
இன்னோரு முறை பிறப்பது என்பது சந்தேகமான வினா..?
பிறந்த வாழ்க்கையில் இறப்பு என்பது சந்தேகமற்ற விடை..!
இதை புரிந்து கொண்டு வாழும் மனிதன் தன்
வாழ்க்கையை சிறப்புற வாழ்கிறான்.
ஏனென்றால் நாம் உலகில் பிறப்பெடுத்து வாழும் முறை
முன்கூட்டியே எழுதப்பட்ட எழுத்துக்கள் அவை நாம் வளர
வளர காலம் அதை படிக்கிறது. வாழும் ஒரு வாழ்க்கையில்
மகிழ்ச்சியாய் வாழ்ந்து முன்மாதிரியாய் இருக்க வேண்டும்.
கவலைகள் சூழும் பொழுது அவை நமக்கு ஏதோ ஒன்று
புகட்டவே வந்ததென எண்ணி அதன் நன்மை,தீமை
உணர்ந்து அதனை விடுத்து அடுத்தபடியே எடுத்து வைப்பதே நல்லது.
சந்தேகமான வினாவில் குழம்பி தீர்ப்பதை விட,
சந்தேகமற்ற விடைகளில் வானவில்லாய் வாழ்வதே பெரும் அழகு.
யாவும் இங்கு மாயை என உணர காலம் எடுத்தாலும்
அது பெரும் பாடத்தை பதிய வைக்கும். பக்குவமற்ற வாழ்க்கை வீண்,
பக்குவம் நிறைந்த வாழ்க்கை என்றென்றும் பொன்.🙂
-தரணி✍

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக